ரயிலில் அடிபட்டு இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

 
ரயிலில் அடிபட்டு இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

சென்னை அருகே ரயிலில் அடிபட்டு இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயிலில் அடிபட்டு இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு


கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கிடையில் கடந்த 20ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் ரயிலில் அடிபட்டு இருந்தது தனது தாயார் சந்திரா என அடையாளம் சொல்லி பிரேத பரிசோதனை முடிந்து அடக்கம் செய்து விட்டார். இந்த நிலையில் மறுநாள் சந்திரா வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேலு, தனது தாயார் சந்திராவை அழைத்துக் கொண்டு தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்துக்கு சென்றார். தனது தாயார் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், ரயில் அடிபட்டு இறந்தவரும் என் தனது தாயார் உடலமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தால் குழம்பி போய் விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரயிலில் அடிபட்டு இருந்தது திரிசூலத்தைச் சேர்ந்த பத்மா வயது 55 என  இன்று அடையாளம் காணப்பட்டது. திரிசூலத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் அடையாளம் சொல்லி உடலை பெற்றுச் சென்றனர்.