ஜோதிடத்தை நம்பி காதலனுடன் ரகசிய திருமணம்; பின்னர் விஷம் வைத்து கொன்ற காதலி கைது

 
suicide

தமிழக கேரள எல்லை பகுதியான பாற சாலையை அடுத்த மூரியங்கரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் சாரோன் ராஜ்-க்கும் பளுகல் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கரிஷ்மாவுக்கும் கல்லூரிக்கு செல்லும் வழியில் காதல் ஏற்பட்டடது. கரிஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை தொடர்ந்து  காதலனை தனது வீட்டிற்கு அழைத்து குளிர்பானத்தில் விஷம் கொடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

சாரோனின் பெற்றோர் இதுகுறித்து பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தியதில், தனது காதலனை விட்டு விட்டு வேற்று ஒருவருடன் திருமணத்திற்கு தயாராதை தொடர்ந்து கரிஷ்மா காதலனை தனது வீட்டுக்கு அழைத்து விஷம் கொடுத்துக்கொன்றது வெளியானது. இதனையடுத்து கரிஷ்மா கைது செய்யபட்டார்

கொலை திட்டம் குறித்து வாக்குமூலம் அளித்த காதலி கரிஷ்மா விசாரணை கைதியாக நெடுமங்காடு காவல் நிலையத்தில் இருக்கும் போது நேற்று கழிவறையில் இருந்து கிருமி நாசினி குடித்து தற்கொலை முயற்சி செய்து  திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கரிஷ்மா அனுமதித்திருந்த நிலையில் நேற்று மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கு சென்று வாக்குமூலம் பெற்று கைது பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கரிஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்த பின்பு பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்கள் அழித்தாதாக தாய் சிந்து மற்றும் தாய் மாமன் நிர்மல் குமார் ஆகிய இருவர் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காதல் ஜோடியின் திருமணத்திற்கு ஜாதி மற்றும் மதம் தடையாக இருந்ததாலும், பெற்றோர்  உடன்படாததாலும், பெற்றோர் பார்த்த திருமணத்திற்கு கரிஷ்மா ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், கரிஷ்மாவுக்கு ஜாதகம் பார்க்கும்போது முதல் திருமணம் நிலைக்காது எனக் கூறியதால், அதனை நம்பி காதலனுடன் சேர்ந்து ரகசிய தாலி கட்டிக்கொண்டு அவருக்கு விஷம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.