என் காதலிக்கு நீங்க ஏண்டா மெசேஜ் பன்றீங்க... பீர் பாட்டிலால் தாக்கிய காதலன்!

 
பீர் பாட்டிலால் தாக்குதல்

சென்னை தண்டையார்பேட்டையில் நண்பனின் காதலிக்கு இன்ஸ்டாகிராமில்  குறுஞ்செய்தி அனுப்பியவரின் தம்பியை பீர் பாட்டிலால் தாக்கிய காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்||Beer bottle attack on  real estate tycoon -DailyThanthi

பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்தர் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த விமல், சூர்யா ஆகியோர் நேற்று இரவு வந்துள்ளனர். சுரேந்தரிடம் எங்கே உனது அண்ணன் ஆனந்த் என கேட்ட போது சுந்தர் தெரியாது என்று கூறியுள்ளார். பின்னர் தனியாக பேச வேண்டும் என கூறி சுரேந்தரை தண்டையார்பேட்டை, கோதண்டராமன் தெருவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

உன் அண்ணன் ஆனந்த், என் காதலிக்கு இன்ஸ்டாகிராமில் தேவையில்லாமல் குறுஞ்செய்தி அனுப்பினான் என்று எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து  சுரேந்தர் கழுத்து பகுதியில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேந்தரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து   விமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் தலைமறைவான சூர்யாவை  தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.