தேவநாதன் மீது 800 புகார்கள்- ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு

 
தேவநாதன் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

தினமும்  புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன,  விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தேவநாதன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கூட்டணியில் தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளரானது எப்படி? | How  did Devanathan Yadav become a Sivaganga candidate - hindutamil.in

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்  மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனரும்,பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர்  அண்மையில் கைது செய்தனர்.
 
இந்தநிலையில் ஜாமீன் கோரி தேவநாதன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முதலீடுகள் முதிர்வடைந்தும் தங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என்றும், இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவகங்கை வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு தேவநாதன் யாதவுக்குத்தான்..  எவ்வளவு தெரியுமா? | Devanathan Yadav has more assets in Sivagangai  constituency in Loksabha election ...

காவல்துறை தரப்பில்  சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது,  ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்டடோர் புகார் அளித்துள்ளனர். தினமும்  புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன,  விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை,   ஆகஸ்ட் 28ம் தேதி  பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.