" 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக..." பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

 
ttn

தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

stalin

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு,  ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் கொள்கை அளவில்  ஒப்புதல் அளிக்கப்பட்டு , விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில்,  முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும்,  அந்த சாலைகளில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில்,  தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்றும் அறிக்கைகளை அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ttn

அக்கடிதத்தில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி, வள்ளியூர் - திருச்செந்தூர்,  பழனி - தாராபுரம் ,ஆற்காடு - திண்டிவனம்,  மேட்டுப்பாளையம் - பவானி, அவிநாசி -மேட்டுப்பாளையம், பவானி - கரூர் உள்ளிட்ட சாலைகளை 500கிமீ  தூரத்திற்கு  தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ,உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.