ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம்

 
fishermen

ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு  இலங்கை நீதிமன்றம் தலா ஐம்பதாயிரம் அபதாரம் விதித்துள்ளது.

fishermen

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 26 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 8 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில் சிறைகாவல்  முடிந்து இன்று எட்டு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் விசாரணை நடத்திய நீதிபதி 8 பேரும் தலா ரூ.50,000 அபதாரம் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் 50,000 செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை காவல் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு விட்டுள்ளார்.