கோயிலுக்குச் செல்லும் வழியில் டயர் வெடித்து விபத்து- 8 மாத குழந்தை பலி

 
death

ஆரணி அருகே பாண்டிச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் பின்பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது. இதில் 8 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாத மாதம் பாண்டிச்சேரியில் உள்ள பிரித்திரிங்க தேவி அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும் இன்று ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாண்டிச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் ஆலயத்திற்கு செல்ல டூரிஸ்ட் வேனில் சென்றுள்ளனர். அருணகிரிசத்தரம் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளி வேனை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலை விண்ணமங்கலம்கூட்ரோடு அருகில் சென்ற போது திடீரென வேனின் பின் பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது. இதில் பயணம் செய்த அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன் அமுதவள்ளி தம்பதியினரின் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் படுகாயமடைந்த 20பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் 5வயது சிறுவனை மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆரணி அருகே கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து 8 மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.