வாக்காளர் சிறப்பு முகாம்-8.59 லட்சம் பேர் விண்ணப்பம்

 
வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் மூலம் 8 லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரசாகு  தெரிவித்துள்ளார்.

2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: பெயர் சேர்க்க மேலும் 7.92  லட்சம் பேர் விண்ணப்பம் | voters list - hindutamil.in

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது, பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.  புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

ஆண்டு தோறும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். இதற்கு முன்பாக வாக்களர் பட்டியலில்  திருத்தப் பணிகளிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அவ்வாறு, கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதி நடைபெற்ற வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மட்டும் 8 லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கான அடுத்த சிறப்பு முகாம் வரும்  27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.