ECR-ல் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் முக்கிய சாலையான ஈசிஆரில் ஒரு காரில் சென்ற பெண்களை திமுக கட்சி கொடி பொறுத்திய காரில் வந்த சிலர் வழிமறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் பெண்களை வழிமறித்த அந்த கும்பல் அவர்களை பின் தொடர்ந்து வீடு வரைக்கும் சென்று தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், விசாரணையில் இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை என விளக்கம் அளித்துள்ள காவல்துறை, மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் தி.மு.க கொடியுடன் வலம் வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.