தமிழகத்தில் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
தமிழகத்தில் 58 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகேஷ் குமார் அகர்வால் ,வினித் தேவ் வாங்கடே, வெங்கட்ராமன் ஆகியோர் நாங்கள் வகிக்கும் பொறுப்பில் சிறப்பு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை நிர்வாகம் தலைமையகம் ஆகிய பொறுப்பின் அந்தஸ்து சிறப்பு டிஜிபிக்களாக இதன் மூலம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மொத்தமாக 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாகவும், இரண்டு ஐஜி கல் ஏடிஜிபிகள் ஆகவும், ஏழு டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும், ஆறு எஸ் பி கள் டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆன தினகரன், காவல்துறை செயலாக்க ஏடிஜிபியாக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையராக சந்தோஷ் இதமானி டிஐஜி பதவி உயர்வு பெற்றவுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சரவண சுந்தர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிரண் சுருதி தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ் பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டோங்ரே பிரவீன் உமேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்குப் பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுந்தரவதனம் கியூ பிரான்ச் சி ஐ டி இன் எஸ் பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ் பி சஷாங்க் சாய் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் காவல் ஆணையராக இருந்த ஐ ஜி பாலகிருஷ்ணன், காவல்துறை தலைமையகத்தின் ஐஜி நிர்வாக பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஜி பாபு ரயில்வே காவல்துறையின் ஐ ஜி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பர்வேஷ் குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கயல்விழி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கி எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . பவானிஸ்வரி ஆவடி தலைமையகம் மற்றும் போக்குவரத்தின் கூடுதலான நேராக நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னையை பொருத்தவரையில் மேற்கு இணை ஆணையர் விஜயகுமார் கிழக்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார், சரோஜ் குமார் தாகூர் சென்னை காவல் ஆணையர் தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் குமார் வடக்கு போக்குவரத்து இணையான பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனோகர் வடக்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பண்டி கங்காதர் தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பகேரலா சிபாஸ் கல்யாண் மேற்கு இணையான ரக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஜெயச்சந்திரனும், பரங்கிமலைத் துணை ஆணையராக வி ஆர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது