கப்பலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 10 முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்கக் கட்டணம்

 
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லை

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை மறுநாள் முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படவுள்ளது.

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் - ல் அமைந்துள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சுங்கச் சாவடி, நகராட்சி பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு தொலைவில் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை,  விதிமுறை மீறி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது .


அமைக்கப்பட்ட நாள் முதலில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி விதிமுறை மீது அமைக்கப்பட்டுள்ளதால் , அதனை மாற்று இடத்திற்கு மாற்றக் கூறி பல்வேறு போராட்டங்கள் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் நாடியா நிலையிலும், விடை கிடைக்காத நிலையில், அவ்வையம் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்து வந்தது.

இந்நிலையில் தற்போது நாளை (10.7.24) முதல் உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கவரி கட்டணம் செலுத்த வேண்டும் எனவும்,  கட்டண  சலுகையாக 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளதால் இதுவரை கட்டண விலக்கில் சென்று வந்த  உள்ளூர் வாகனங்கள் நாளை முதல் 50 சதவீத கட்டணத்தை செலுத்த சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளபடியால், உள்ளூர் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.