5 பேர் மரணம்- டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவு

 
விமான சாகசத்தைக் காண குவிந்த மக்கள்..! கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள்  நேற்று நடைபெற்றன.  

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, LB சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள்  வெள்ளத்தில் மூழ்கியது.  அதேபோல் கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாகவெ காணப்பட்டன. வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி காண வந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு , தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விளக்கத்துடன் அறிக்கை சமர்பிக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 பேர் மரணமடைந்த சம்பவத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.