ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

 
ஆம்ஸ்ட்ராங் கொலை : அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. காவல்துறை கேட்பது என்ன?

தமிழக பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பசக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மூளையாக இருந்த திமுக வழக்கறிஞர் அருள் |  DMK Lawyer Arul found as main accused in BSP Leader Armstrong Murder

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிஹரன், ஹரிதரன், சிவா மற்றும் அஸ்வதாமன் ஆகியோர் வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என, பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதேபோல, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செந்தில் நாதன், சக்திவேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகியோருக்கும் தடை விதித்த பார் கவுன்சில்,  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விழுப்புரம் வழக்கறிஞர் கோவிந்தராஜன், முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணியரசனுக்கும் பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.