காதலிக்க சம்மதிக்காத இளைஞர் மீது ஆசிட் ஊற்றிய 37 வயது பெண்!

 
ஆசிட் வீச்சு

கேரளாவில் 27 வயது இளைஞர் மீது காதல் கொண்ட 37 வயது பெண் ஒருவர் ஆசிட் வீடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதலன் மீது ஆசிட் வீச்சு ; பெண் மீது வழக்கு | Dinamalar Tamil News

திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்ற 27 வயது இளைஞருக்கும் இடுக்கி அடிமாலிப் பகுதியை சேர்ந்த என்ற திருமணமான பெண் ஷீபாவுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆகவில்லை என அந்த பெண் கூறியதையடுத்து அருணும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் ஷீபா அருணை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்தித்தபோதுதான் அவருக்கு 37 வயதாவது அருணுக்கு தெரியவந்தது. இது தெரிந்ததால் அந்த இளைஞர் பின் வாங்க ஆரம்பித்தார். 

ஆனால் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அருணை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அருண் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என உறுதியாக தெரிவித்ததையடுத்து, அவரிடம் ஷீபா இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த இளைஞரும் ஷீபாவுக்கு பணம் கொடுக்க சம்மதித்துள்ளார். பணத்தை கொடுக்க அடிமாலிக்கு வரச்சொன்ன ஷீபா, அவர் பணம் கொடுக்க வந்த சமயத்தில், தான் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதில்  அருணின் முகத்தில் ஆசிட் பட்டு கண்பார்வை பறிபோனது. இதுகுறித்து அருண் அளித்த புகாரின் பேரில் ஷீபாவை போலீசார் கைது செய்தனர்.