ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு

 
இந்த ஊர்களுக்கு மட்டுமே ஆம்னி பேருந்து இயக்கம்..!

ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்துள்ளது போக்குவரத்து ஆணையரகம். பொங்கல் விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருக்கும் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்து


பொங்கல் விடுமுறை ஒட்டி அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விரிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்துள்ளது. வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் இயங்கும் பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதிக்கவும், பேருந்துகளை சிறை வைக்கவும் போக்குவரத்து ஆணையரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது .


தமிழகம் முழுவதும் இதற்காக மூன்று பேர் கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் சோதனையிட உள்ளனர். நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில்  சோதனை நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிப்பது பர்மிட் தற்காலிகமாக ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கையை எடுப்பர் என்று தகவல் வெளியாகியுள்ளது.