மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்த வட மாநில தொழிலாளியின் மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் இந்திரா நகர் பகுதியில் பாலு என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ்கோல், பிட்டுகோல் தம்பதியினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ராகினி என்கின்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டுக்கு வெளியில் விளையாடு கொண்டிருந்த ராகினி காணாமல் போனதால் தொழிற்சாலை பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது இவர்கள் தங்கி பணி செய்யும் தொழிற்சாலை பகுதியில் சுமார் 10 அடி ஆழமுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி இருந்த நிலையில், குழந்தை அந்த தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பின்பு கோட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் மூன்று வயது குழந்தை மழைநீர் சேகரிப்பு தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
visual -ftp
script -mail


