விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - மதுரையில் நிகழ்ந்த சோகம்!!

 
tn

மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Death
மதுரை மாநகராட்சி 70 ஆவது வார்டு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுது ஆகியுள்ளது.  இதனால் மின் மோட்டாரை வெளியில் எடுத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய முயன்ற போது விஷ வாயு தாக்கியுள்ளது. சிவகுமார் என்ற தொழிலாளி சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய போது விஷவாயு தாக்கி  கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே இறந்துள்ளார். அவரை காப்பாற்ற லட்சுமணன் ,சரவணன், உள்ளே இறங்கிய போது அவர்களையும்  விஷவாயு தாக்கி உள்ளது. இதனால் 3 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.

death

இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ். எஸ். காலனி போலீசார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன், உரிமையாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.