விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் மரணம்: காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

 

விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் மரணம்: காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து சிப்காட்டில் உள்ள பல கம்பெனிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இந்த நிலையில், அந்த உணவு நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த நிறுவனத்தின் உரிமையாளர் 3 துப்புரவு பணியாளர்களை அழைத்திருக்கிறார். இன்று காலை முருகன், பாக்கியராஜ், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் மரணம்: காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் மரணம்: காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தமிழகத்தில் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மலக்குழிகளில் மனிதர்களை இறக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, பல இடங்களில் இச்சம்பவம் தொடருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியெல்லாம் வெறும் கண் துடைப்பு தான். இத்தகைய அவல நிலை, தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.