அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து.. - ஹைகோர்ட் உத்தரவு..

 
Highcourt

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆட்சியில்  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்ட புகார்கள்  தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.   தன் மீதான வழக்குகளை ரத்து செய்யும்படி   அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து..  - ஹைகோர்ட் உத்தரவு..

அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது  ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டதாக என அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை  உயர் நீதிமன்றம் அமைச்சர் மீதான 3 வழக்குகளையும்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.