அழகு நிலையத்துக்கு சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- 3 பேர் கைது

 
sexual-harassment

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் உடந்தையாக இருந்த பெண் உட்பட மூன்று பேர் போக்சேகாவில் கைது செய்யப்பட்டார். 

Four people arrested in pocso act in sivagangai

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராஜா. டாக்சி ஓட்டுநராக பணியாற்றிவரும் இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த 23 ஆம் தேதியன்று, உடன்படிக்கும் சக மாணவி மூலம் அழகு நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பெண் ஒருவர் மூலம், அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஜில் லெட்சுமி (45) விக்னேஷ் (28) மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து லெட்சுமி ,விக்னேஷ், மற்றும் ஒருவரை பிடித்து விசாரித்த நிலையில் மூவரையும் போக்ஸோவில் கைது செய்த காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார்,  இந்த வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் மிகைப்படுத்தி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அச்சமின்றி புகார் தரலாம் என்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிக்கை தெரிவித்துள்ளார்.