2வது ஆலை பரவக்காரணமே தேர்தல்தான்; இதில் இன்னொரு தேர்தலுக்கு அனுமதியா? அதிர்ந்த ஐகோர்ட்

 

2வது ஆலை பரவக்காரணமே தேர்தல்தான்; இதில் இன்னொரு தேர்தலுக்கு அனுமதியா? அதிர்ந்த ஐகோர்ட்

உள்ளாட்சி பதவிகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் காலியாக இருக்கின்றன. இப்போது வரைக்கும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. மாறாக, தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலேயே தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தவறான தகவல்களை அளித்து வருகிறது.

2வது ஆலை பரவக்காரணமே தேர்தல்தான்; இதில் இன்னொரு தேர்தலுக்கு அனுமதியா? அதிர்ந்த ஐகோர்ட்

மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்றால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பினை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘’ஏற்கனவே 2வது அலை உருவானதற்கு தேர்தல் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. இதில், மீண்டும் ஒரு தேர்தல் அறிவுப்பினை வெளியிட்டால் பிரச்சாரங்களால் கொரோனா அதிகம் பரவ காரணமாக அமைந்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.