ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆடிக்கிருத்திக்கை நாளான ஜூலை 29ஆம் தேதி ( திங்கள்கிழமை ) அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
ஆறுபடை முருகப்பெருமானின் முக்கிய பண்டிகையான ஆடி கிருத்திகை அடுத்த மாதம் 29 ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணி சாமி கோவிலில் 29-7-24 ( திங்கள்கிழமை) அன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறை தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் , அவசர பாதுகாப்பு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 10- 8 -2024 ஆம் ஆண்டு (சனிக்கிழமை ) பணி நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
ஆடி கிருத்திகை விழா 5 நாட்கள் விழா நடைபெற இருப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி புதுவை, ஆந்திரா கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இருந்தும் அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகள், மின்சார ரயில்கள் பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட உள்ளனர்.