கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்? எஸ்.வி.சேகரிடம் கேட்ட கருணாநிதி

கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன  செய்வாய்? எஸ்.வி.சேகரிடம் கேட்ட கருணாநிதி

நான் ஒரு நடிகனாக 1980 லிருந்து கலைஞர் அவர்களை பழக்கம். கடந்தமுறை அவர் முதலமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் எங்களின் வீட்டு 3 திருமண நிகழ்சிகளில் கலந்து கொண்டு கை நிறைய அட்ஷதை போட்டு வாழ்த்தியுள்ளார். அவர் பிறந்த நாள் நினைவில் அரசியலைத்தாண்டி என்னை நேசித்த கலைஞரின் பிறந்த நாள் இனிய நினைவுகளுடன்.. என்று குறிப்பிட்டு, கருணாநிதியின் 98வது பிறந்த நாளில் அவருடனான படத்தை பகிருந்துள்ளார் எஸ்.வி.சேகர்.

கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன  செய்வாய்? எஸ்.வி.சேகரிடம் கேட்ட கருணாநிதி

கட்சி, அரசியல் தாண்டி ஒரு தந்தை போல் என் மேல் பாசம் காட்டியவர் கலைஞர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன  செய்வாய்? எஸ்.வி.சேகரிடம் கேட்ட கருணாநிதி

மேலும் , 1992ல் கருணாநிதியிடம் சுக பிரம்ம மகரிஷியின் படத்தை அளித்தேன். இது யார் என்று கேட்டார். ஐயா, இது குபேரனுக்கே வெங்கடாஜலபதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்த சுக பிரம்ம மகரிஷி. அவர் மார்க்கண்டேயருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் காட்சி இது என்றேன்.

அதற்கு அவர், ‘’இப்படி கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார்.

கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன  செய்வாய்? எஸ்.வி.சேகரிடம் கேட்ட கருணாநிதி

அதற்கு நான், ‘’இதைவிட பெரிய மூக்குள்ள பெண்ணை பார்த்துவிட்டேன்’’என்று சிரித்துகொண்டே சொன்னேன். அவரை சந்திக்கும்போதெல்லாம் இந்த படத்தை கொடுப்பேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார் என்று கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.