சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 26 பேருக்கு கொரோனா

 
iit

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்றும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சில பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. ஒருவேளை கொரோனா தொற்றாக இருக்கலாம் என எண்ணியதை அடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 3 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் ஐஐடி வளாகத்தில் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

Covid Positive

இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் இன்றும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6650 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 171 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐ.ஐ.டி. வளாகம் தொற்று பகுதியாக மாறி இருப்பதால் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.