சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையும் பயன்பாட்டில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்!!

 
rain

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையும் பயன்பாட்டில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

rain

இந்நிலையில் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது; தண்ணீர் தேங்கி இருக்கும் சாலைகளில் இருந்து நீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் மழை நீரை அகற்றும் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம்; ஜி.என்.செட்டி சாலை - வாணி மஹால் சந்திப்பில் இருந்து பசுல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

rain

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 154 இடங்களில் தேங்கியிருந்த  மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு உள்ளது என்றும் கனமழையால் முறிந்து விழுந்த  579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.