விஜய்யை சந்திக்க செல்லும் 210 பேர்

 
ச்ச் ச்ச்

கரூர் வெண்ணைமலையில் இருந்து தவெக தலைவர் விஜயை சந்திக்க 7 ஆம்னி பேருந்துகளில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 35 குடும்பத்தினர்கள், உறவினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் தனியார் மண்டபத்திற்கு வரவழைத்து நாளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் இன்று கரூர் வெண்ணமலையில் இருந்து.ஆம்னி சொகுசு பேருந்துகளில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் 35 குடும்பத்தினர்கள் 7 ஆம்னி சொகுசு பேருந்துகள் மூலம் மாமல்லபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். உயிரிழந்த 35 பேரின் குடும்பங்களில் இருந்து 210 நபர்கள் 7 ஆம்னி பேருந்துகளில் அழைத்து செல்லபட்டுள்ளனர். மேலும் 2 குடும்பத்தினர் இரவு மாமல்லபுரம் செல்ல உள்ளனர்.