ஞானசேகரனால் சிக்கிய 21 வீடுகள்! கடுங்கோபத்தில் ஏரியா மக்கள்

 
ச்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீடு இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான கோவில் நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ச்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலை துறையின் அதிகாரிகள் மற்றும் கிண்டி வருவாய் துறை அதிகாரிகள் ஞானசேகரன் வீடு அமைந்துள்ள மண்டபம் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர். அங்குள்ள மண்டபம் மற்றும் வீடுகளை  அளந்த நிலையில் ஞானசேகரன் வீடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள அனைத்து வீடுகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த இடம் முழுவதும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிலத்திற்கு சொந்தமானது என உறுதி செய்ததையடுத்து கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில் அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலை துறையின் தாசில்தார் திருவேங்கடம் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் நாராயணி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொண்டனர். 

ஞானசேகரன் வீட்டை சிறப்பு புலனாய்வு குழு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு இரண்டு அட்டை பெட்டிகளில் முழுவதும் ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பினர் வருவாய்துறைக்கும் இந்து சமய அறநிலைத்துறைக்கும் மற்றும் மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி இந்த இடம் யாருக்கு சொந்தமானது என விளக்கம் கேட்டிருந்தது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டு இந்த இடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என உறுதி செய்தனர். பின்னர் மயிலாப்பூர் இணை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கோவில் நிர்வாக அலுவலர் தலைமையிலும் தாசில்தார் உள்ளிட்டோர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கோவில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்; வருவாய்த்துறை ஆய்வில் அம்பலம்.! -  Tamil Spark

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி இடத்திலும் ஆக்கிரமித்து உள்ளதா என்பது குறித்தான சோதனைகளில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பல ஆண்டு காலமாக இதே பகுதியில் தான் வசித்து வருகிறோம் எனவும் திடீரென அதிகாரிகள் வந்து வீட்டை சோதனையிடுவது என்பது என்ன செய்வது என தெரியவில்லை. பல நாட்களாக வீட்டிற்கு வரி செலுத்துவதற்கான பணிகளையும் வாடகை செலுத்துவதற்காக கோவில் அதிகாரிகளை சந்தித்து எவ்வித பலனும் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்து தெரிவித்துள்ளனர். கோவில் நிலம் என தெரிந்தது தான் இங்கு வசித்து வருகிறோம் வாடகை கட்ட சொன்னால் தயார் நிலையில் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதலில் அளவு செய்யப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு இடம் என அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்பு குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அப்புறப்படுத்தவும் அல்லது வீடுகளை இடிக்கவும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.