பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம்!

 
ttn

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும், தனித்துவம் வாய்ந்த தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 வெளியிட்டார். மேலும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதி உதவியும் கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

stalin

கொரனோ நோய்த் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களையும் ,நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு கடந்த மே மாதம் 29ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார், இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் கீழ் இதுநாள் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 256 குழந்தைகளுக்கு 12.80 கோடி மற்றும் ஒரு  பெற்றோரை இழந்த 6 ஆயிரத்து 493 குழந்தைகளுக்கு 124.9 கோடி என மொத்தம் 6 ஆயிரத்து 749 குழந்தைகளுக்கு 207.59 கோடி தமிழக அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

stalin

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சமூக நல இயக்குனராக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ,இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, தமிழக முதல்வர் 7வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.