தொண்டையில் கேரட் சிக்கியதில் 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி

 
s

சென்னையில் இரண்டு வயது குழந்தை கேரட் சாப்பிட்டு  விளையாடி கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தது.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி பிரமிளா என்ற மனைவியும், இவர்களுக்கு  இரண்டு வயதில் லத்திஷா என்ற மகள்  உள்ளார். கொருக்குப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையை பிரமிளா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தை லித்திஷா வீட்டில் இருந்த கேரட்டை சாப்பிட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்தது. திடீரென லித்திஷா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே பிரமிளா, குழந்தையை பழைய வண்ணாரப்பேட்டை ஜோதி  தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே குழந்தை இறந்த விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.