ஆன்லைனில் சாட்டிங்! லாட்ஜில் ரூம்! 5 இளைஞர்களுடன் 2 மாணவிகள் செய்த வேலை!!

 
lover

ஆன்லைன் சாட்டிங் மூலமாக பழக்கமான 5 இளைஞர்களுடன்  அரசுப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் சென்னையில் லாட்ஜில் தங்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

லாட்ஜில் ரூம் போட்டு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. அதிர்ந்து போன  போலீஸ்..! |

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் இருவர், டிக்டாக் அடிமைகள், அடிக்கடி வீடியோ எடுத்து அதனை டிக்டாக், ஷேர் ஷாட்டில் பதிவிட்டு, அதில் வரும் லைக்குகளை பார்த்து உற்சாகமடைவதுண்டு. அந்தவகையில், சாட்டிங் செயலி மூலம் அந்த இரு மாணவிகளுக்கு விருதாசலத்தை சேர்ந்த சுரேன் ( எ) அப்பு (வயது-22), வினித் ( வயது-20), பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சஞ்சய் ( வயது-19), குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 2 ம் ஆண்டு படிக்கும் மாணவன், எர்ணாவூரை சேர்ந்த லெனின் ஜெரால்ட் ( வயது-18) ஆகிய ஐந்துபேர் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு பிரிந்து வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்னையில் ரூம் எடுத்து தங்கியுள்ளானர்.

இந்நிலையில், அந்த மாணவிகள் இரண்டு பேர் திடீரென காணமல் போனதால், அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தேடியபோது, இந்த 5 இளைஞர்களுடன் பதினொன்றாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் இருவரும் சென்னை செண்ட்ரலில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞர்கள் மாணவிகளை விருந்துக்கு அழைத்ததாகவும், இரவு விருந்து முடிய நீண்ட நேரம் ஆனதால், லாட்ஜில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து லாட்ஜில் தங்கிய  5 மாணவர்களையும் கைது செய்த  சங்கர்நகர் போலீசார் மாணவிகளிடம் அந்த வாலிபர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா? என விசாரணை நடத்திவருகின்றனர்.