இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடி வந்த 2 பேர் கைது!
குன்னூரில் வெடி பொருட்கள் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்பாடுத்த தேவையான பொருட்களை மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளான மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. அவற்றினை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.அவற்றின் இறைச்சிக்காக வெடிகள் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காட்டேரி பகுதியில் கார் ஒன்றினை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் வன விலங்குகளை வேட்டையாட பயன்பாடுத்த தேவையான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த ராமகிருஷ்ணன், ராஜன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடி வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த கத்தி, வெடி பொருட்கள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை குன்னூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.