விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி - அமைச்சர்கள் நேரில் ஆறுதல்..

 
விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி -  அமைச்சர்கள் நேரில் ஆறுதல்..


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது  சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த நிலையில்,  அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு நேரில் ஆறுதல் கூறினர்.  

விநாயகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு நேற்று தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட  சப்பரத்தில் விநாயகர் சிலைகளை வைத்து  ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக  சப்பரத்தின் மேல்பகுதியில்  உயரழுத்த மின் கம்பி உரசியதால்  மின்சாரம் பாய்ந்தது.  சப்பரத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்றோர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில்,   முனீஸ்வரன் (வயது 24),  மாரிமுத்து, பாண்டியன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.   உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  னீஸ்வரன், மாரிமுத்து ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி -  அமைச்சர்கள் நேரில் ஆறுதல்..

 மற்ற 3 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து  அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க  வேண்டும் என்று மருத்துவர்களுக்கு  அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.  தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவியும்  அளித்தனர். இந்த விபத்து தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.