மதுரை மேம்பால கட்டுமான பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து - 2 பேர் படுகாயம்

 
மதுரை மேம்பால கட்டுமான பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து - 2 பேர் படுகாயம்

மதுரையில் கடந்த ஆண்டு விபத்து நிகழ்ந்த அதே மேம்பால கட்டுமான பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதுல்  2 பேர் படுகாயம் அடைந்தனர்.  

மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 545 கோடி ரூபாய் செலவில் பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.   மதுரை தல்லாகுளம் - செட்டிக்குளம் வரை 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த மேம்பால பணிகள் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இந்த பணியானது நிறைவு பெற்று இந்த மாதம் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்.   கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது.  இந்த  விபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால்  மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டது.  

மதுரை மேம்பால கட்டுமான பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து - 2 பேர் படுகாயம்

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இரு பக்கமும் கட்டப்பட்டுள்ள பாலத்தை இணைக்க  தொழிலாளர்கள்  முயன்றுள்ளனர்.   2 பாலத்தின் தூண் இணைப்பாக வைக்கக்கூடிய ஹைட்ராலிக் கிரேன் பொருத்திக் கொண்டிருந்தனர்.  அப்போது கிரேனின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றோரு பக்கம் செல்ல கூடிய கம்பி திடீரென பயங்கர சத்தத்துடன் அறுந்து விழுந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த மதுரை திருப்பாலையை சேர்ந்த விஷ்வா என்பவரும், தஞ்சாவூரை சேர்ந்த  பாலம் கட்டுமான பணியாளர்  பாஸ்கர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.  

மதுரை மேம்பால கட்டுமான பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து - 2 பேர் படுகாயம்

உடனடியாக  அவர்கள் இருவரும்  மீட்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் சார்பாக மேம்பால பணியை செய்துவரும்  தனியார் கட்டுமான நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த விபத்திற்காக  கட்டுமான பணிகளை செய்துவரும்,   மும்பையை சேர்ந்த JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.  அத்துடன்  அந்நிறுவன பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.