கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சு. சொன்ன முக்கிய தகவல்!!

 
vaccine camp

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா  தடுப்பூசி முகாமில் 18.08 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 இலட்சம் சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 31 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 61 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

vaccine

ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (24-07-2022) 19,39,260 (91.43%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 13,81,006 (65.11%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 03-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (24-07-2022) 3042.612 (90.93%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,46,193 (76.10%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (24-07-2022) மொத்தம் 34,72,338 (9.19%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

vaccine

இன்று (24-07-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 18,08,600 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 141,985 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 5,49,164 பயனாளிகளுக்கும் மற்றும் 11,17,451 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 95.59% முதல் தவணையாகவும் 88.51% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாநிலத்தில் நேற்று  நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று  கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.