இன்று 18.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது- அமைச்சர் மா.சு

 
vaccine camp

இன்று நடைபெற்ற 10வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாமில் 18,21,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் -அமைச்சர்  மா.சுப்பிரமணியன்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இன்று நடைபெற்ற 10வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாமில் 18,21,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ் 40,17,485 பேருக்கு ஒரு வார காலத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 75.75% பேருக்கு முதல் தவணையும், 39.53% 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசியும், 60% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து தடுப்பூசி முகாம்கள் மூலமும் 1,94,11,888 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை 11வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாமும், வரும் ஞாயிற்றுக்கிழமை 12வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் மருத்துவ பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலித்துக்கொள்ள முன்வர வேண்டும்.  மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் தடுப்பூசி போடும் பணிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறினார்.