‘கிசான் திட்ட முறைகேடு’ 1,600 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

 

‘கிசான் திட்ட முறைகேடு’ 1,600 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த 1,600 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு சிறு கடன் வழங்கும் திட்டமான பிரதமரின் கிசான் திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர். அண்மையில், கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவிட்டதன் பேரில், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

‘கிசான் திட்ட முறைகேடு’ 1,600 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

அந்த ஆய்வின் முடிவில் கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக் கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.5.580 கோடியும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.6 கோடியும், திருவாரூரில் ரூ.80 லட்சமும் வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

‘கிசான் திட்ட முறைகேடு’ 1,600 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

இந்த நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த 1,600 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முறைகேடு பற்றி வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்ட ஆட்சியர், வெளிமாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியதாக தெரிவித்திருக்கிறார்.