நாளை 149 பள்ளிகளுக்கு விடுமுறை..!

 
1 1

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது. 

இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை (8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.