மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு!

 
Thiruparanguntram Thiruparanguntram

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் மாட்டு கறி சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.