திருச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற 14 ஆசிரியர்கள்!

திருச்சியில்  நல்லாசிரியர் விருது பெற்ற 14 ஆசிரியர்கள்!

திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆசிரியர்கள், தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை சேர்ந்த 6 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒரு ஆசிரியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் என மொத்தம் 14 ஆசிரியர்கள் தமிழக அரசால் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்சியில்  நல்லாசிரியர் விருது பெற்ற 14 ஆசிரியர்கள்!

அந்த ஆசிரியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர்.

திருச்சியில்  நல்லாசிரியர் விருது பெற்ற 14 ஆசிரியர்கள்!

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.