“கொரோனா அச்சம்”: பிளஸ்-2 தேர்வு ஒத்திவைப்பா? – பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு!

“கொரோனா அச்சம்”: பிளஸ்-2 தேர்வு ஒத்திவைப்பா? – பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்பட்டன. இவையெல்லாம் வதந்தி என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இருப்பினும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

“கொரோனா அச்சம்”: பிளஸ்-2 தேர்வு ஒத்திவைப்பா? – பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாக்களிக்கச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என நடத்தப்படும் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு போடப்படும் என்ற வதந்தியை நம்பாதீர்கள்” என்று சொல்லியிருந்தார்.

“கொரோனா அச்சம்”: பிளஸ்-2 தேர்வு ஒத்திவைப்பா? – பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு!

இருப்பினும் மக்கள் மத்தியில் பீதி நிலவிவருகிறது. இதற்கு நடுவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற குழப்பத்தில் மாணவர்களும் பெற்றோரும் திண்டாடிவருகின்றனர். இச்சூழலில் பள்ளிக் கல்வித் துறை முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.