தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் சதமடித்த வெயில்..!

 
1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் கொளுத்துவது போன்று, தற்போது வெப்பம் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்மாக மதுரையில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

இதேபோல், ஈரோடு, நாகப்பட்டினம், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்தது. அடுத்தபடியாக பாளையங்கோட்டை, தஞ்சாவூர், அதிராமப்பட்டினம், திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட்டும்,  கரூர், கடலூரில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், புதுச்சேரியில் 101, காரைக்காலில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் வெயில் பதிவாகியுள்ளது.