"தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்" : தமிழக அரசு உத்தரவு !

 
tn govt

 தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

POLICE

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,   கோவை மாநகர ஆணையர் தீபக் எம்.தாமோர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கோவை மாநகர காவல் ஆணையாராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி எஸ்.பி.யாக மூர்த்திக்கு பதில் சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
 அதேபோல் நெல்லை எஸ்.பி.யாக மணிவண்ணனுக்கு பதில் சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  


latest tamil news

சென்னைகாவல்துறை  தெற்கு , போக்குவரத்து இணை ஆணையராக  ராஜேந்திரனும், புளியந்தோப்பு உதவி ஆணையராக மணிவண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூர் எஸ்.பி.யாக  எஸ்.ராஜேஷ்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

tn

சிபிசிஐடியில் சிறப்பு விசாரணை பிரிவு எஸ்.பி.,யாக மூர்த்தியும்,  சென்னை, உதவி ஆய்வாளர் ஜெனரலாக செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நெல்லை, திருச்சி, வேலூர் எஸ்.பி.க்கள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.