‘என் இறப்புக்கு இந்த 3 பேர் தான் காரணம்’...11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம், விராலிகாட்டூர் பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Human Bodies Move For Over A Year After Death, Find Australian Scientists

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாணவியின் தோழியின் அம்மா இறந்த மாணவியை திட்டியதாகவும் அதன் காரணமாக தனது தாயிடம் தெரிவித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது,

இறந்த மாணவியின் தோழிக்கு ஒரு இளைஞர் போன் செய்து கொண்டே இருந்துள்ளார். அந்த இளைஞர்களிடம் தோழியின் அம்மா உங்களுக்கு இந்த போன் நம்பரை யார் கொடுத்தது என விசாரித்ததற்கு இறந்த மாணவியின் பெயரை அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனையடுத்து தோழியின் அம்மா இறந்த மாணவியை கண்டித்துள்ளார், இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இறப்பதற்கு முன் தன்னுடைய இறப்பிற்கு காரணம் என மூன்று ஆண்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துள்ளார்.


இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் தோழியின் அம்மா தேவி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார், அதேபோல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று இளைஞர்களை பிடிக்க  தனிப்படை போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.