பிறந்த நாளே இறுதி நாளான பெருஞ்சோகம்... நண்பர்களோடு கொண்டாடியபோது நின்ற மூச்சு
Dec 25, 2024, 20:43 IST1735139582323
![ச்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ebe555374c2402fcd23eb18adc021415.jpg)
ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு செல்லும் பாதையில் பிள்ளைஏரியில் மூழ்கி 11- ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் தகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதி மகன் நகுலன் (16). பதினோராம் வகுப்பு பயிலும் மாணவனான இவனுக்கு இன்று பிறந்த நாள். ஆகவே பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கொம்மேடு செல்லும் பாதையில் பிள்ளைஏரியில் சக சிறுவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி 11- ஆம் வகுப்பு மாணவன் பலியாகி உள்ளார். தற்பொழுது மாணவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.