வீட்டு வேலை செய்ய கூறியதால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

கோபி அருகே  பெற்றோர்கள் வீட்டு வேலை செய்ய கூறியதால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

suicide

கோபி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சரவணன்(36). இவர் வேட்டைகாரன் கோயிலில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா(30) என்ற மனைவியும், காவியா(13), அட்சயா(10) என்ற இரு மகள்கள் உள்ளனர். மஞ்சுளாவும்  தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

காவியா அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.அட்சயா பெற்றோருடன் தங்கி கோபியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அட்சயாவை சரவணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அட்சயா வீட்டல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.