10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இது  தொடர்பாக தமிழக முதல்வருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வந்தார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் பள்ளியில் பதிவு  செய்துள்ள  செல்ஃபோன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும் எனவும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

கல்வியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ள நிலையில்  மதிப்பெண்களில் குறை இருந்தால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in / பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.