திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்.பி.கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 10 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவின் கூட்டுக் குழு, இரண்டு அவைகளிலும் சேர்த்துமொத்தம் 31 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. மக்களவைக்கு 21 மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் இடம்பெற்றனர். கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர் களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5 என 16 எம் பிக்கள் உள்ளனர். நியமன எம்பிக்கள் 2 என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து வக்ஃபு மசோதா தொடர்பாக பல தரப்பினருடமிருந்தும் ஆலோசனைகளை பெற்றது. ஏப்ரல் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக வக்பு திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முயற்சித்துவருகிறது.
இவற்றை ஆய்வு செய்ய தங்களுக்குபோதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பிய நிலையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.