‘மனைவி தற்கொலை’.. அடுத்த நாளே 2 குழந்தைகளுடன் ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவர் !

 

‘மனைவி தற்கொலை’.. அடுத்த நாளே 2 குழந்தைகளுடன் ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவர் !

வெங்கடேசனுக்கும் நிர்மலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்த நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(30),  சில ஆண்டுகளுக்கு மன்னார் நிர்மலா (24) என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இப்போது 2 வயதில் ஒரு பெண்குழந்தையும் 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெங்கடேசன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் வந்தார். திருமணம் ஆனதிலிருந்து இவர்கள் இரண்டு பேருக்கும் அவ்வளவாகச் சண்டை வராது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனுக்கும் நிர்மலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்த நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ttn

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் 2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அறியாத வெங்கடேசன் மனவேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து, மனைவி போலவே தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி தன் குழந்தைகளுடன் ரயில் மீது மோதி தற்கொலை செய்து கொண்டார்.

ttn

இதில் குழந்தைகள் உட்பட மூன்று பேரும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.