மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு!

 

மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு!

எல்லா வகையிலும் கட்சி வளர்ச்சிக்கும் கட்சியில் பெண்களுக்கான பங்களிப்பை பெற்றுத்தருவதிலும் முக்கிய பங்காற்றுவார் என நம்புகிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த வகையில் மூன்றாண்டுகள் அக்கட்சி வெற்றிகரமாக பயணித்து வருகிறது. அதேசமயம் பல முக்கிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாகக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘நமது கட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்திட பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நியமனங்கள் நடந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்.அந்த வழியில், நமது கட்சியில் சேர்ந்து, கட்சி வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பங்களித்து வரும் மகளிருக்கான பொறுப்புகள் தமிழகம் முழுமைக்கும் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. அதன் துவக்கமாக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநிலச் செயலாளராகத் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அவர்களை நியமனம் செய்கிறேன்.

சமூகத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் இருக்கும் பெண்களின் கருத்தையும் செயல்திறனையும் நாம் நமது கட்சிக்கு பயன்படுத்திக்கொள்வது அவசியமானது. அதைப்போல் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் நமது கட்சியில் அளித்திடவேண்டும் என்பதற்காக, பி.இ பட்டதாரியான திருமதி மூகாம்பிகா ரத்தினம் அவர்கள் இப்பொறுப்பிற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்து அறிவித்திருக்கின்றேன்.இவர் பெண்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு, சமூக சேவை, 
என பன்முகத்தன்மை கொண்டவர். அத்துடன் தற்போது விவசாயத்திலும் தனது பெரும்பங்காற்றி வருகிறார். இவர் எல்லா வகையிலும் கட்சி வளர்ச்சிக்கும் கட்சியில் பெண்களுக்கான பங்களிப்பை பெற்றுத்தருவதிலும் முக்கிய பங்காற்றுவார் என நம்புகிறேன்.

ttn

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மற்றும் கட்சியின் அனைத்து சார்பு அணியினர், கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.