கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குவந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டது!

 

கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குவந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டது!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படுவது குறைப்பட்டுள்ளது. தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மார்ச் 31 ஆம் தேதிவரை தமிழக- கேரள- கர்நாடக எல்லை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு மட்டும் எல்லையில் அனுமதிக்கப்படுகிறது.

Ambulance

இந்நிலையில் துபாயில் இருந்து வந்த தமிழர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டனர். அந்த ஆம்புலன்ஸ் தமிழக – கேரள எல்லையான புளியரை டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஆம்புலன்ஸாக இருந்தாலும் எல்லையில் நுழையக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் நுழையும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் லாரிகளின் ஓட்டுநர் பரிசோதனைக்கப்பட்டு, லாரிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.